திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் சித்த மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியை இன்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு சித்தா மருத்துவ பெட்டகம், கபசுரக் குடிநீரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் ,உதவி ஆணையர் வினோத், மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ,மாநகர செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் கண்ணன் ,இளங்கோ, மோகன்தாஸ் ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்.திருச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் 30 படுக்கைகள் காலியாக உள்ளது. 70ஆக்சிஜன் படுக்கைகளும் காலியாக உள்ளது. சமூக இடைவெளி மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் விரைவில் நோய் குணமாகும் பொதுமக்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். மாநகருக்கு தண்ணீர் வழங்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் பணிகளை ஆய்வு செய்ய இருக்கிறேன். குடிதண்ணீர் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அத்தனை வசதிகளும் செய்து வருகிறோம். தொடர்ந்து அரியமங்கலம் பகுதியில் குப்பை அகற்றும் பணியை பார்வையிட உள்ளோம். பாதாள சாக்கடை திட்டம் எங்கு இல்லையோ அங்கு விரைவில் செயல்படுத்த உள்ளோம். இப்போது நடந்து கொண்டிருக்க பணிகளை விரைவுபடுத்த உள்ளோம். மழை காலத்திற்கு முன்னர் அனைத்து பணிகளும் விரைந்து முடித்து உய்யக்கொண்டான் ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். மழைக் காலத்திற்கு முன்பாக அனைத்து பகுதிகளும் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வாய்க்கால்களில் அதையும் தூர்வாரும் பணிகளை செய்ய இருக்கிறோம் புதிய சாலை பணிகளை ஆய்வு செய்து அதையும் செய்ய இருக்கிறோம் தொற்று நோய் ஒழிப்பது மட்டும் மட்டுமல்ல அரசு பணி மக்கள் தேவைகளையும் செய்வதும் தான். விரைவில் சாலைகள் குடிதண்ணீர் வழங்குவது உள்ளிட்ட அனைத்தையும் செயல்படுத்த உள்ளோம் மேலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தனை பணிகளும் ஆய்வு செய்ய உள்ளோம் என எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *