தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7-மணி முதல் மாலை 5மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. குறிப்பாக மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு அனுமதியுடன் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை திருச்சி அரசு மருத்துவமனையில் தற்போது 13 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் 39-பேர் என மொத்தம் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் யாரும் இன்று வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்