திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்தும் , குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் ரோந்து செய்தும் , வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதின்பேரில் , திருச்சி மாநகரம் , காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட W.B ரோடு , மரக்கடை சந்திப்பில் உள்ள பொது கழிப்பிடம் அருகில் கடந்த 13.09.21 – ந்தேதி ரிசாந்த் என்பவரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டதாக அவரது தாய் கொடுத்த புகாரின்பேரில் காந்திமார்க்கெட் காவல்நிலையல் வழக்கு பதிவு செய்யப்பட்டு , வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான சூர்யா வயது 21 என்பவரை கைது செய்து 13.09.21 ந்தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இவ்வழக்கின் குற்றவாளியான சூர்யா மீது 2 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது . மேலும் குற்றவாளி தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும் , அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் காந்திமார்க்கெட் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையிளை பரிசீலனை செய்து குற்றவாளி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆணையிட்டார்கள் . அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் சூர்யா குண்டர் தடுப்பு சட்டத்தின்படி ஆணை 11.11.21 ந்தேதி சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும் , திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்