திருச்சியில் கடந்த 11ம் தேதி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ .500 / – பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து . வழக்கின் சம்மந்தப்பட்ட குற்றவாளி தர்மா ( எ ) தர்மசீலன் வயது 22 என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் விசாரணையில் குற்றவாளி தர்மா ( எ ) தர்மசீலன் கடந்த 2021 ம் ஆண்டு ஏர்போர்ட் , D.Mart அருகில் குட்டை பகுதியில் அருண் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கும் . பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது .

 இதேபோல் பொன்மலைபட்டி ரோட்டில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ .1000 / – பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து . வழக்கின் சம்மந்தப்பட்ட குற்றவாளி அப்துல்நசீர் ( எ ) நசீர் வயது 20 என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் குற்றவாளி அப்துல்நசீர் ( எ ) நசீர்மீது கடந்த 2021 ம் ஆண்டு பாலக்கரையில் ஒரு கடையில் இரவில் திருட முயன்றும் . கடை ஊழியரை கட்டையால் தாக்கி . செல்போனை பறித்த சென்ற வழக்கும் . பல்வேறு காவல் நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது எனவே , குற்றவாளிகள் தர்மா ( எ ) தர்மசீலன் மற்றும் அப்துல்நசீர் ( எ ) நசீர் ஆகிய இருவரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் , பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பவர்கள் என விசாரணையில் தெரிய வந்ததால் , மேற்கண்ட குற்றவாளிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து , திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார் . அதனை தொடர்ந்து குற்றவாளிகள் தர்மா ( எ ) தர்மசீலன் மற்றும் அப்துல்நசீர் ( எ ) நசீர் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் , திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *