திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் , பெரியசாமி டவர் அருகில் , நடந்து சென்ற கூலி தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ .2000 / -த்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , குற்றவாளி முத்துபாண்டி வயது 28 என்பவரை கைது செய்து , நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . மேலும் விசாரணையில் குற்றவாளி முத்துபாண்டி மீது திருச்சியில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக ஒரு வழக்கு உட்பட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது . எனவே , குற்றவாளி முத்துபாண்டி என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் கத்தியை காண்பித்து பணம் பறிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால் ,

மேற்கண்ட குற்றவாளியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து , திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள் . அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி முத்துபாண்டி மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும் , திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *