திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சி திருச்சி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இளங்கோ தலைமையில் அக்கட்சியினர் மனு அளித்தனர்.

அந்த மனுவில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா இனாம்குளத்தூர் கிராமத்தில் இருந்து திருச்சி- திண்டுக்கல் நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது . மேலும் இந்த சாலையை ஏராளமான லாரிகள் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் லாரிகள் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. மேலும் இந்த சாலையை இனாம்குளத்தூர் கிராம மக்கள் மற்றும் இதர பகுதிகளை சேர்ந்த மக்களும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். மதுரை, திண்டுக்கல், திருச்சி மாநகர் செல்லும் மக்களும், வாகனங்களும் இந்த சாலையை தான் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றன.

மேலும் இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. கடந்த வாரம் கூட ஒரு டேங்கர் லாரி மோதி பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு சாலையை சரி செய்து அப்பகுதி மக்கள் இந்த சாலையை பயன்படுத்த ஏதுவாக அமைத்துக் கொடுக்க வேண்டும். சாலையில் அகலப்படுத்த வேண்டும். சாலையில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட டி.ஆர்.ஒ அபிராமி உடனடியாக இந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த மனு கொடுக்கும் நிகழ்வின்போது ஆம் ஆத்மி கட்சி இணைச் செயலாளர் இம்ரான் கான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *