திருச்சி சந்துகடை பகுதியில் உள்ள ஹஜ்ரத் ஹீசேன்ஷா பண்டாரிஷா தர்காவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை 3 மர்ம நபர்கள் இன்று விடியற்காலையில் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தர்காவின் நிர்வாகிகள் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 புகாரின் அடிப்படையில் கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான 3 வாலிபர்களின் உருவத்தை வைத்து யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *