சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மனைவி ஜெயலட்சுமி இவர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் தனது மகள் பரமேஸ்வரி வயது 28 இவருக்கும் திருச்சி வயலூர் மெயின் ரோடு அம்மையப்பன் நகர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 9 வயதில் கீர்த்தனா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் எனது மகள் பரமேஸ்வரி மற்றும் அவரது மகள் கீர்த்தனா ஆகியோர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் அருகில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர்கள் இன்று வரை வீடு திரும்பவில்லை இவர்கள் இருவரையும் தேடி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தேடி கிடைக்காததால்

திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் புகார் மீது உரிய விசாரணை நடத்தி காணாமல் போன எனது மகள் மற்றும் பேத்தி ஆகியோரை கண்டுபிடித்த தர கோரி புகார் மனு அளித்தார். இந்த புகார் மீது அரசு மருத்துவமனை ஆய்வாளர் அருள்ஜோதி வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண் மற்றும் அவரது மகளை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்