திருச்சி பொன்னகர் காமராஜபுரம் தெருவில் உள்ள அமராவதி கூட்டுறவு நியாயவிலைக் கடையில் இன்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் பிஜேபி மண்டலத் தலைவர் பரமசிவம் தலைமையில் பிஜேபி கட்சியினர் பிரதமர் மோடியின் உருவப்படத்தை கடையில் மாட்டினர் .

அப்போது ரேஷன் கடையில் நின்றிருந்தார் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த திமுகவினர் மற்றும் 55-வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் ஆகியோர் மோடியின் பாடத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவம் இடம் வந்த காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

இந்த தள்ளுமுள்ளு பிரச்சனையின் போது பிரதமர் மோடி படம் கீழே விழுந்து நொறுங்கியது. அப்போது பத்திரிக்கையாளர்கள் கீழே விழுந்து கிடந்த மோடியின் படத்தை வீடியோ எடுக்க முற்பட்டபோது அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வேகமாக வந்து மோடியின் படத்தை எடுத்து சாக்கடையில் வீசி எறிந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் திமுகவினர் தாக்கியதாக கூறப்பட்டு திருச்சி கண்டோன்மெண்ட் பிஜேபி மண்டல தலைவர் பரமசிவம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *