தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதிமுக கட்சி வேட்பாளர்கள் வீதிவீதியாக சென்று அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கோவில்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி உறையூர் 27-வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அன்பழகன் தென்னூர் மந்தை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி 16 வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மதிவாணன் பழைய பால்பண்ணை பகுதியில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி 38வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தாஜுதீன் அரியமங்கலம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி 52வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடும் துர்காதேவி மரியன்னை ஆலயம் முன்பு தீவிரவாதத்தில் ஈடுபட்டார்.

திருச்சி மாநகராட்சி மாமன்ற தேர்தலில் 49 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மகாலட்சுமி மலையப்பன் காஜா பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தார்.

இந்தப் பகுதியில் வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினரானதும் செய்ய உள்ள பணிகளான குடிநீர்ப் பிரச்சனை, சாலை வசதி, சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்போம் என உறுதி கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *