சூரிய கிரகணம் ஒரு அரிய வானியல் நிகழ்வு. இந்த ஆண்டின் இரண்டாவது நிகழ்வான பகுதியளவு சூரிய கிரகணம் நிகழ்வு தொடங்கியது. இந்தியாவின் சில பகுதிகளில் இதைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் தென்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து, அதன் கதிர்கள் பூமியில் படுவதைத் தடுக்கும் போது சூரிய கிரணம் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் இந்நிகழ்வு மாலை 5.15 முதல் 5.45 மணி வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படிதமிழகத்தில் சூரிய கிரகணம் தொடங்கிய நிலையில், திருச்சியில் ஆர்வமாக சூரிய கிரகணத்தை Advanced Astronomical Telescope, Solar Projection Box,Dobsonian Telescope ஆகிய உபகரணங்களை கொண்டு சூரிய கிரகணம் நடைபெறும் நிகழ்வை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *