மக்களவைத் தோ்தலுக்கு பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட 9 சட்ட பேரவை தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 2547 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுக்காக பயன்படுத்தவுள்ள 3053 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3053 கட்டுப்பாட்டு கருவிகள், 3307 விவிபேட் இயந்திரங்களில் முதல் கட்டமாக எந்தெந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு எந்தெந்த இயந்திரங்கள் என கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று நடைபெற்றது..இந்த வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, விவிபேட் இயந்திரங்களை திருச்சி வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் இன்று அனுப்பி வைக்கும் பணியை துவக்கி வைத்தாா்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறுகையில் : திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தை நேற்று குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் தொகுதி வாரியாக இன்று பிரித்து அனுப்பப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் 2547 வாக்கு சாவடி மையம் உள்ளது 3053 வாக்குபதிவு இயந்திரம், 3053 கட்டுப்பாட்டு கருவிகள், 3307 விவிபேட் உள்ளது. மண்டல அழுவர்களுக்கு நாளை பயிற்சி வழங்கப்படுகிறது. வாக்கு அலுவலர்களுக்கு 24 ஆம் தேதி பயிற்சி வழங்கப்பட உள்ளது. நேற்று மாலை வரை 70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 7 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது 63 லட்ச கைப்பற்ற பட்டுள்ளது. இன்று காலை 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 10 லட்சத்திற்கு மேல் இருந்தால் வருமான வரி துறையில் தெரிவிக்கப்படும் ஆவணம் சரியாக இருந்தால் திருப்பி ஒப்படைக்கப்படும் இறந்த தலைவர்களில் சிலைகள் மூட வேண்டாம் சிலைகளில் கீழே உள்ள பெயர்களை மூட வேண்டும் என ஆணையம் தெரிவித்து உள்ளது என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *