திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள அன்பு டீ ஸ்டால் கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது அறிந்து ரூ .5000 / – அபராதம் விதிக்கப்பட்டது .

மேலும் , அவர் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் அந்த கடையில் ஆய்வில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரூ .10,000 / – அபராதம் விதிக்கப்பட்டது . அதன் தொடர்ச்சியாக சென்னை , உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேனா IAS அவர்கள் 26.09.2022 – ல் அவசர தடையாணை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் அந்த வணிக கடை சீல் செய்யப்பட்டது .

மேலும் , மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் . ரமேஷ்பாபு கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 – ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார் .

இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தனர் . இதுபோன்று பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்களுக்கும் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் உணவு பொருள் வாங்கும் கடைகளில் கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறைக்கு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்