காசநோய் ஒழிப்பு குறித்த கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். இதில், திருச்சி காசநோய் மருத்துவ பணிகள் இயக்குர் சாவித்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் பேசினார்:

மத்திய அரசு 2030-க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க முயன்று வருகிறது. இதே வேளையில், தமிழக அரசு 2025-க்குள் காசநோய் முற்றிலும் ஒழித்திட வேண்டும் என்ற முயற்சியில் மாநிலத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பல்வேறு துறைகளை சார்ந்துள்ள சுகாதாரதுறை நேர்முறை நம்பிக்கையுடன் செயல்படும் போது பலவகையான சவால்களை சந்தித்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 32 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். இவை பெரும்பாலும் மக்கள் கூடும் இடங்களில் அதிகளவில் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. காசநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டு 6 மாத தொடர் சிகிச்சைக்கு பிறகு முழுமையாக அவற்றில் இருந்து குணமடைய வாய்ப்புள்ளது. இந்தியாவில் தீவிர தடுப்பு நடவடிக்கையால் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் பேர் குறைந்து கடந்த ஆண்டில் 26 லட்சமாக குறைந்துள்ளது. தினசரி பரவலாக 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக காசநோய் கிருமி காற்றின் மூலம் பரவுவதால் தும்மல், இருமல் வரும் போது வாயில் துணி வைத்துக் கொள்வது நல்லது. காசநோயை அலட்சியப்படுத்தினல் எதிர்ப்பு சக்தி குறைந்து துணை நோய்கள் வர வாய்ப்புள்ளது. 1982 ஆண்டுகளுக்கு முன்பு போதிய விழிப்புணர்வு இல்லாததால் காசநோய் பரவல் பல மடங்கு அதிகரித்தது. இதனால் அப்போதைய பிரபலங்கள் பலர் காசநோயால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 45 வாகனங்கள் மூலம் காசநோய் கண்டறியும் சோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கடந்தாண்டில் 49,108 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. எல்லாவித வயதினருக்கும் காசநோய் வர வாய்ப்புள்ளதால் 5 நாட்களுக்கு மேல் தொடர் இருமல் மற்றும் அதற்கான அறிகுறி இருந்தால் அருகில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனையில் உடனடியாக சோதனை செய்து கொள்வது நல்லது. இதுபோன்ற காசநோய் தடுப்பு நடவடிக்கையில் திருச்சி மாவட்டம் மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது என்றார்.    இந்த நிகழ்வில், உலக சுகாதார நிறுவனம் ஆலோசகர் தெய்வீகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *