திருச்சி மாவட்ட காவல் அலுவகத்தில் குற்ற சம்பவ புள்ளி விபரங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ,கூடுதல் காவல்துறை இயக்குனர் தாமரைக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் , திருச்சி சரகம் மற்றும் தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத்தலைவர்கள் சரவணசுந்தர் , . கயல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர் ,

இக்கூட்டத்தில் திருச்சி , புதுக்கோட்டை , கரூர் , பெரம்பலூர் , அரியலூர் , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மத்திய மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டு அவரவர் தங்களது மாவட்ட குற்ற சம்பவ புள்ளி விபரங்கள் பற்றி தெரிவத்தனர் . மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் கூடுதல் காவல்துறை இயக்குனர் அவர்கள் காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் அனுகுவது , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் , கைதிகள் விசாரணை , சைபர் குற்றங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது சம்மந்தமாக தக்க அறிவுரை வழங்கியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *