திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் சமூகநீதி பாதுகாப்பு கழகத்தின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் முத்துராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. மாநில பொருளாளர் கோவிந்தராஜ், மாநில செய்தி தொடர்பாளர் ரவி ரத்தினம், மாநில மகளிரணி தலைவர் கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சமூகநீதி பாதுகாப்பு கழகம் தலைவர் கல்யாணசுந்தரம் சிறப்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து சமூகநீதி பாதுகாப்பு கழக தலைவர் கல்யாணசுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்.

 

மத்திய மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டுக் கொள்கை களை முறை யாக ரோஸ்டர் அடிப்படையில் பின்பற்றாமல் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் கல்வி வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதே நடைமுறைப்படுத்துவதற்கு அதை கண்காணிப்பதற்கு அதை முறையாக அரசுகளுக்கு தெரியப்படுத்தவும் நீதிமன்றம் மூலமாக பெற்று கொடுப்பதற்காகவும் இந்த சமூகநீதி பாதுகாப்பு கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் போன்ற மக்களை ஒருங்கிணைத்து அனைத்து சமூக மக்களுக்கான உரிமைகளுக்காக சமூக நீதிக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு கழகமாக வரலாற்றிலேயே சமூகநீதி பாதுகாப்பு கழகம் செயல்படும். அந்த அடிப்படையில் இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

மேலும் சாதி அடிமைத்தனம் பெண்ணடிமைத்தனம் ஒளி அடிமைத்தனம் தேசிய அடிமைத்தனம் வர்க அடிமைத்தனம் போன்ற கொள்கைகளுக்கு எதிராக மக்களுக்கு ஒடுக்குமுறைகள் இருக்கக்கூடிய இந்த எதிரான செயல்படக்கூடிய இந்த கொள்கைகளை எதிர்த்து அந்தக் கொள்கைகளை முறையாக நடைமுறைப் படுத்துவதற்கும் சமூகநீதி பாதுகாப்பு கழகம் துணையாக நிற்கும் சமூகநீதி பாதுகாப்பு கழகத்தினுடைய பெண்ணுரிமைக்காக எடுக்கக்கூடிய போராட்டங்கள் என்பது முழுமையாக பெரிய தொகையை முன்னிறுத்தியே பெண்ணுரிமை பேணிய நடவடிக்கையில் ஈடுபடுவோம் தூய்மை தொழிலாளர்கள் மின்வாரிய மற்றும் இருக்கக்கூடிய பல்வேறு பணியாளர்கள் போன்றவர்களுக்கெல்லாம் வங்கிகளை போன்று சம்பளம் வழங்க வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம் அதிலே மின் வாரிய பணியாளர்கள் போக்குவரத்து பணியாளர்கள் போன்ற பணியாளர்களும் உள்ள அடங்குவார்கள் இவ்வாறு இந்த சமூக நீதி பாதுகாப்பு கழகத்தின் மூலமாக அனைத்து மக்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரத்தில் முன்னுரிமையை பெற்றுக்கொடுப்பதற்காக சமூக நீதிப் பாதுகாப்பு கழகம் என்பது துனையாக இயங்கும் அதற்காக இந்த சமூக நீதிப் பாதுகாப்பு கழகம் தோற்றுவிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் மாநிலச் செயலாளர் பிரிவு புஷ்பராஜ் , துணைப் பொதுச்செயலாளர் ஈபன் பொன்ராஜ் ,தமிழ் கனி, மாநில இணையதள தொடர்பாளர்கள் தலைவர் மணி பெரியசாமி (ராமநாதபுரம்) செயலாளர் காளிதாஸ் (திருப்பூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்