திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் வேளாண்மை, உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற வேளாண் சங்கமம் கண்காட்சி அரங்கினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். விழா மேடையில் பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கி, 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

வேளாண் சங்கமம் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் 250உள்ளரங்குகளும், 50வெளி அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் 17மாநில அரசு துறைகளும், மத்திய அரசின் 8ஆராய்ச்சி நிறுவனங்களும், 3வேளாண்மை சார்ந்த பல்கலைக்கழகங்களும், 80க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டன. இக்கண்காட்சியில் பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய வேளாண் கருவிகள், பல்வகை தென்னை ரகங்கள், செயல்விளக்கத் திடல்கள், பசுமைகுடில்கள், மண்ணில்லா விவசாயம், நவீன இயந்திரங்கள், ட்ரோன்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

இவ்விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேளாண்மை துறை ஆணையர் சுப்பிரமணியன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *