திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் இன்று இரவு 7 மணி அளவில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் தண்ணீரில் மிதந்து வந்தது. இதனைப் அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் மெல்க்யூ ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தைந்தையை மீட்டனர். இது குறித்து தில்லைநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடம் வந்த போலீசார் பச்சிளம் குழந்தை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் இந்தக் குழந்தை யாருடையது என்றும், தவறான முறையில் பிறந்ததால் குழந்தையை வாய்க்காலில் தூக்கி எறிந்தார்களா, அல்லது ஆண் குழந்தை என்பதால் நரபலி கொடுக்கப்பட்டதா என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்