தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினர் அதனைத் தொடர்ந்து வருகிற 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். இந்நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக முதன்மை கழகச் செயலாளருமான கே என் நேரு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பத்மநாபனை எதிர்த்து அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை ரவுண்டானா அருகே உள்ள பஸ் ஸ்டாப் அருகே திமுகவினர் வாழ்த்து மற்றும் வரவேற்பு பேனர் வைத்திருந்தனர்