திருச்சி பாலக்கரை மோட்டார் வேர்ஹவுஸ் குடிசைப்பகுதி அம்பேத்கர் நகரை சேர்ந்த டேவிட் என்பவரின் மகள் ஜெனிட்டா வயது 10 இவர் (அம்மா இல்லாதவர்) மேலப்புதூர் பிலோமினாஸ் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது அத்தையின் பராமரிப்பில் அவரது வீட்டில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் ஜெனிட்டாவின் அத்தை திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டின் வெளியே சென்றவர் மீண்டும் வீடு வந்து சேரவில்லை. இவர் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது கத்திரிப்பூ கலர் டாப் ( கையில்லாத சட்டையும் ) மற்றும் மஞ்சள் ரோஸ் பூ போட்ட வெள்ளை கலர் லெகின் அணிந்து உள்ளார். மேலும் ரெட்டை ஜடை கருப்பு ரிப்பன் அணிந்து‌ இருந்துள்ளார். பார்ப்பதற்கு சிவப்பு நிறமாகவும் ஒல்லியான தேகம் கொண்ட சிறுமியை காணவில்லை என திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது சிறுமியை யாரேனும் கண்டால் திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் உள்ள தொலைபேசி எண் (0431-2413007) மற்றும் பாலக்கரை காவல் ஆய்வாளர் ( 94981-65031) செல் நம்பருக்கு தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.