திருச்சி திருவானைக்காவல் பகுதியில் கேரளா உட்டன் பர்னிச்சர் ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் துணைத் தலைவர் கே எம் எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி குழுமத்தின் நிறுவனர் கே எம் எஸ் ஹக்கீம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தினமலர் ஆசிரியரும் பங்குதாரருமான டாக்டர் ராமசுப்பு பாலாஜி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேமஸ் ரெசிடென்சி நிறுவனர் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் முதல் விற்பனையை தொடங்கி வைத்திட அதனை வழக்கறிஞர் அலெக்ஸ் பெற்றுக் கொண்டார். முன்னதாக கேரளா உட்டன் பர்னிச்சர் கடையின் உரிமையாளர்களான ஷேக் முகமது, இலியாஸ் அகமத், ஷேக் அப்துல் காதர் மற்றும் அல் அமீன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இந்த புதிய கடையில் தேக்குமரத்தினால் ஆன உயர்ரக மரக்கட்டில் மர பீரோ மரத்தினால் ஆன சோபா நாற்காலி ஊஞ்சல் உள்ளிட்ட அனைத்தும் தரமானதாகவும் நம்பிக்கையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இந்த திறப்பு விழாவை முன்னிட்டு முதலில் வரும் 60 வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 2300 மதிப்புள்ள சிறப்பு பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இந்த திறப்பு விழாவில் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்