திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் இக்பால் காலனி பகுதியை சேர்ந்த உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமி இவர் நவல்பட்டு காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வருகிறார்‌. இவரது கணவர் நடராஜன் இவர் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமி உடல்நலக் குறைவுடன் இருந்ததாகவும். மேலும் இவருக்கு கடன்தொல்லை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆதிலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து நவல்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடம் வந்த போலீசார். பெண் உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமியின் உடலைமீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமி தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *