பேசும் புத்தகம் வலைதளம் மற்றும் டேஸ்பிரிங்ஸ் வேதாகம பல்கலைக் கழகம் சார்பில் புத்தகத் திறனாய்வு மற்றும் வேதாகமத்தில் பல்வேறு நிலைகளில் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கான பட்டமளிப்பு வழங்கும் விழா திருச்சி மாவட்டம், பிராட்டியூரில் உள்ள ரியாலிட்டி பவுண்டேஷன் ஹாலில் பல்கலைக் கழக இயக்குனர் முனைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.

 

சிறப்பு விருந்தினராக பல்கலைக் கழக இயக்குனர் முனைவர் டோனியல்கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பட்டமளிப்பு பேருரையை கம்யூனிட்டி பைபிள் ஸ்டொடி இன்டர்நேஷனல் தென் பிராந்திய இயக்குனர் முனைவர் மனோகரன் வழங்கினார். முன்னாள் FMPB முன்னாள் பொதுச்செயலாளர் முனைவர் சைமன்பொன்னையா பட்டங்களை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் புத்தகத்க ஆய்வு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தேர்ச்சி பெற்ற 12மாணவ, மாணவியருக்கான பட்டங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்பிஷப் ஹீபர் கல்லூரியில் முன்னாள் முதல்வர் மார்க்ஸ் பூமிநாதன், முனைவர் பால் மதிவாணன், மைக்கேல் ராஜ், ஞானசேகரன், வினோத், பெண் கவிஞர் ஷாலினி ஜெரால்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.