திருச்சி மேல கல்கண்டார் கோட்டை சதாசிவம் மகன் இளவரசன் இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் கையெழுத்து போட வந்த பொழுது படுகொலை செய்யப்பட்டார் . இந்த கொலையில் தொடர்புடைய திருச்சி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் துரை என்கின்ற துரைசாமி வயது 30 அவரது தம்பி சோமு என்கின்ற சோமசுந்தரம் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர் இன்று மதியம் இவர்கள் திருச்சி அடுத்த குழுமாயி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக உறையூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து குற்றப்பிரிவு ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அண்ணன் தம்பி இருவரையும் பிடித்தனர் இருவரும் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் இரண்டு போலீசாரை அறிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர் போலீசார் அவர்களை எச்சரித்தும் அவர்கள் ஓடிக்கொண்டே இருந்தனர் இதனால் போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் . இதில் இருவரது கால்களிலும் குண்டு பாய்ந்தது. உடனடியாக போலீசார் அவர்களை பிடித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மோகன் உள்ளிட்ட மூன்று போலீசார் மற்றும் இரண்டு ரவுடிகள் என ஐந்து பேருக்கு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 ரவுடிகளுக்கு அறுவை சிகிச்சை செய்து குண்டுகளை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் அறிந்த திருச்சி காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைத்தனர் இச்சம்பவத்தால் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்