திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான விண்ணப்ப தாரர்களுக்கு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தாலுகா மட்டும் ஆயுதப் படையில் 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 8 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த பதிவுக்கான பொது தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் ஏப்ரல் 7ஆம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் இந்த பணிக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும், அவர்களுக்கு உதவும் வகையிலும், இந்த உதவி மையம் காலை 9 மணி முதல் 6 மணி வரை செயல்படுகிறது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்ப தாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நேரிலோ அல்லது 9445465974, 996596614 என்ற செல்போன் எண்களிலோ தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்