திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மணல் அல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்ட நிலையில் அதிகப்படியாக இரவு நேரங்களில் மாட்டு வண்டியை கொண்டு மணல் அள்ளுவதாக புகார் வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும் அதிகாரிகளை கொண்டு ஆலோசனை நடத்தினர். இதில் சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் நம்பர் 1 டோல்கேட் அருகே கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் கொண்டு மணல் அள்ளி ஒரு இடத்தில் மறைத்து வைத்து லாரிகளில் ஏற்றி விற்கப்படுவதாக லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் நம்பர் 1 டோல்கேட் அருகே பூக்கொல்லை பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்,

அப்போது ஆற்று மணல் மலை போல் குவியியல் குவியிலாக இருந்துள்ளது. மேலும் சேலம் மாவட்டம் கம்பம்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 40) லாரி ஓட்டுநர் மற்றும் சமயபுரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் வயது 37 ஆகிய இருவரையும் கைது செய்து மணல் அள்ளி செல்வதற்காக நிறுத்தபட்ட லாரியும், மணல் அல்ல பயன்படுத்துவதற்கு நிறுத்தபட்ட பொக்கலினையும் லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் பறிமுதல் செய்து கொள்ளிடம் காவல் ஒப்படைத்தார். பூக்கொல்லை பகுதியில் மலை போல் குவிக்கப்பட்டுள்ள பல லட்சம் மதிப்புள்ள மணலையும் பறிமுதல் செய்து வருவாய் துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபடும் என்றும், மேலும் மணல் மாபியா கும்பல் யார் என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறோம் என லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.நம்பர் 1 டோல்கேட் பகுதி என்பது பல மாவட்டங்களை இணைக்க கூடிய முக்கியமான பகுதியாக இருப்பதால் அருகிலேயே கொள்ளிடம் காவல் நிலையம் உள்ளது.

நம்பர் 1 டோல்கேட் பகுதியில் தினமும் 10க்கும் காவலர்கள் என பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இந்தப் பகுதி முழுவதும் சிசிடிவி கொண்டு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் கொள்ளிடம் காவல் நிலைய காவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு இரவு நேரங்களில் மாட்டுவண்டிக்கு மணல் அல்ல அனுமதி அளித்துள்ளனரா? அல்லது இங்கு பணிபுரியும் காவலர்கள் ஆட்களை வைத்து இரவு நேரங்களில் மணல் திருடுகிறார்களா? என வெளிப்படையாக தெரிய வருகிறது. இது பல மாதங்களாகவே நடந்து வருவது இதனை கண்டு கொள்ளாமல் கொள்ளிடம் காவலர்கள் இருப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கொள்ளிடம் காவல் நிலைய காவலர்கள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதற்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றால் கொள்ளிடம் காவல் நிலைய காவலர்கள் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நடவடிக்கை எடுத்தால் தான் இது போன்ற மணல் திருட்டுகளை தடுக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்