திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல் வாரி துறை ரோடு பகுதியில் இடுகாடு மற்றும் சுடுகாடு உள்ளது. இதன் வளாகத்தின் முன் பகுதியில் மாநகராட்சியின் திருச்சி அரியமங்கலம் கோட்டம் நுண் உரம் செயலாக்கம் மையம் உள்ளது. இந்த மையத்தில் அரியமங்கலம் மாநகராட்சி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து குப்பை கழிவுகள் வாகனங்கள் மூலம் பெறப்பட்டு இந்த நுண் உரம் செயலாக்கம் மையத்திற்கு கொண்டுவரப்பட்டு இந்த மையத்தில் மக்கும் குப்பை, மறுசுழற்சி குப்பை, ஒதுக்கும் குப்பை என பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாநகராட்சி ஊழியர்கள் குப்பை கழிவுகளை மயானத்திற்கு செல்லும் பாதையை மறைத்து மலை போல் குவித்து வைத்திருப்பதால் இடுகாடு மற்றும் சுடுகாட்டிற்கு பிணங்களைக் அடக்கம் செய்ய கொண்டு வருபவர்கள் மற்றும் இறுதி சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் செய்ய வருபவர்கள் இந்த குப்பை கழிவுகளை கடந்து செல்ல பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் மணல் வாரி துறையோடு சாலை ஓரங்களில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு மர்ம நபர்களால் அடிக்கடி தீயிட்டு கொளுத்துவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது.

இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். தற்போது தமிழகத்தை நல்லாட்சி செய்து வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சியின் கீழ் செயல்படும் திருச்சி மாநகர மேயராக இருக்கும் அன்பழகன் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணுவாரா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *