பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, திருச்சி மாவட்ட நலவாழ்வு சங்கம் ( District Health Society ) சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பு. திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவுதல் மூலம் தற்சமயம் அதிக அளவிலான நோயாளிகள் மருத்துவமனை மற்றும் கோவிட் கேர் மையங்களுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவதால் கூடுதல் மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்களின் அத்தியாவசிய தேவைப்பணியினை கருத்தில் கொண்டு , தகுதிபெற்ற மருத்துவ அலுவலர்கள் ( MBBS பதிவு பெற்ற மருத்துவர் ) மற்றும் தகுதியுள்ள செவிலியர்கள் ( DGNM or B.Sc Nursing with Nursing Council Registration ) உள்ளவர்களை மூன்று மாத கால அளவிற்கு தேவைக்கேற்ப தற்காலிகமாக கொரோனா சிகிச்சை வழங்க ஏதுவாக மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் வருகிற 15.05.2021 அன்று தகுதியுள்ள மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் நேர்காணலில் கலந்துக்கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

குறிப்பு :

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது .

  1. எந்தவொரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது .
  2. பணியில் சேருவதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் ( Undertaking ) அளிக்க வேண்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்