திருச்சி மாநகரில் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கனரக வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் பிரதான சாலைகளில் ஆடு, மாடுகள் சுற்றித் திரிவதால் அதிகப்படியான விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பு சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. இந்த விபத்துகளை தவிர்ப்பதற்காக மாநகராட்சி மேயர் அன்பழகன் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய அபராதம் விதித்தார்.

மேலும் மாநகர சாலைகளில் போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளை பிடித்து உறையூர் மாநகராட்சி பகுதியில் அடைத்து வைப்பதற்காக ஒப்பந்தக்காரர் தமிழ் செல்வன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் அன்பழகனிடம் திருச்சி மாநகரில் உள்ள கால்நடைகளின் உரிமையாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது.

திருச்சி மாநகர சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளை பிடித்து மாநகராட்சி இடத்தில் அடைத்து வைப்பதற்காக ஒப்பந்தக்கார தமிழ்ச்செல்வன் என்பது நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் கட்ட வரும் உரிமையாளர்களிடம் கால்நடைகளை தராமல் திருட்டுத்தனமாக விற்பதாகவும், ஒரு சில கால்நடைகளுக்கு போதிய உணவு அளிக்காமல் தினமும் 300 ரூபாய் உணவுகென தனியாக பணம் பெற்றுக் கொள்வதாகவும் உரிமையாளர்கள் யாரேனும் எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்களது கால்நடைகளை அடித்து துன்புறுத்துவதாகவும் புகார் அளித்தனர்.

இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கால்நடைகளின் உரிமையாளர்களிடம் தெரிவித்தார். மேலும் வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *