உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளன்று மாடுகள் குளிப்பாட்டப்பட்டு அதன் கொம்புகளில் வர்ணம் தீட்டி, நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு மாலைகள் இட்டு, சலங்கைகள் கொண்டு அலங்கரிக்கப் படுகின்றன.

 சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் செய்யப்பட்டு அவற்றுடன் செங்கரும்பு, பழவகைகள் ஆகியவை மாடுகளுக்கு படையலிடப்பட்டு வழிபாடு நடத்தி பின் வழிபாட்டுப் பொருட்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன.

 

அன்றைய தினம்  சிறப்பான தமிழர் திருநாளில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் மாதவப்பெருமாள் கோயில் பகுதியில் குமருக்குடி கிராமத்தில் குடும்பத்துடன் உழவுக்குப் பயன்படுத்தும் மண்வெட்டி, கத்தி, அருவாள் உள்ளிட்ட பொருட்கள் வைத்தும் மாடுகளுக்கு திலகமிட்டு மாலையிட்டு அவைளுக்கு பொங்கல் வைத்து படையலிட்டனர்.

 

பின்னர் மாடுகளுக்கு பொங்கல் வழங்கினர். கரும்பை எடுத்து தட்டில் தட்டி பொங்கலோ பொங்கல் என சத்தமிட்டு உற்சாகமாய் குழந்தைகள்,சிறுவர் முதல் பெரியவர் வரை மாட்டுப் பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்