அரசு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு சார்பில் வானவில் மன்றம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று திருச்சி இ.ஆர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாக வானவில் மன்றத்தின் சார்பாக போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டு தர்மாகோல் மற்றும் காகிதங்களை பயன்படுத்தி ராக்கெட்டை உருவாக்கினர். மேலும் ராக்கெட்டின் செயல்பாடுகள் மற்றும் பாகங்கள் குறித்து ஆசிரியர்களிடம் செய்து காட்டினர். மாணவர்களின் ஆர்வத்தையும், முயற்சியையும் கண்ட ஆசிரியர்கள் அவர்களை பாராட்டி மகிழ்ந்தனர்.
இதில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர் சிவா மற்றும் தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், அறிவியல் ஆசிரியர்கள் குழந்தைவேல், ராம்குமார்,விஜயகுமார், பார்த்திபன், ராமகிருஷ்ணன், எம்.ஏ ரமேஷ் குமார் ஆகியோர் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர்…