திருச்சி பாலக்கரை மோட்டார் வேர்ஹவுஸ் குடிசைப்பகுதி அம்பேத்கர் நகரை சேர்ந்த டேவிட் என்பவரின் மகள் ஜெனிட்டா வயது 10 இவர் (அம்மா இல்லாதவர்) மேலப்புதூர் பிலோமினாஸ் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். டேவிட் திருநெல்வேலியில் வேலை பார்த்து வருகிறார்.‌ தற்போது ஜெனிட்டா மட்டும் அத்தையின் பராமரிப்பில் அவரது வீட்டில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் ஜெனிட்டாவின் அத்தை திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு வந்து சேரவில்லை. உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சமூக வலைத்தளங்களில் மாணவியின் படத்தை பதிவு செய்து மாணவியை கண்டுபிடித்து தாருங்கள் என கோரிக்கையுடன் வைரலாக பரவியது. இந்நிலையில் நேற்று இரவு சிறுமி ஜெனிட்டா தனது தோழி வீட்டில் இருப்பதாக திருநெல்வேலியில் இருக்கும் தனது தந்தையின் செல் நம்பருக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் பாலக்கரை போலீசார் அங்கு சென்று சிறுமியை பத்திரமாக மீட்டனர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். கடந்த இரண்டு நாட்களாக பள்ளி சிறுமி ஒருவர் வீட்டைவிட்டு கோபித்துக் கொண்டு வெளியே சென்ற சம்பவம் திருச்சி மாநகரில் உள்ள போலீசார் மற்றும் பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்