திருச்சி கிழக்கு ஆண்டார் வீதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியின ஸ்ரீகாந்த் இருவரிடம் இதே பகுதியை சேர்ந்த முதியவர் சங்கரகிருஷ்ணன் வயது 61 என்பவர் தான் மாவட்ட ஆட்சிரியர் அலுவலகத்தில் துணை வட்டடாச்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளதாகவும் , தன்னால் அரசு பணியை மாற்றுத்திறனாளிக்கான இடஒதுக்கீட்டில் வாங்கித்தர முடியும் என ஆசை வாரத்தை கூறி மாவட்ட ஆட்சிரியர் அலுவல வளாகத்தில் வைத்து ரூ .25,000 / – பணமும் , பின்னர் மாற்றுத்திறனாளியான ஸ்ரீகாந்த் வீட்டிற்கு சென்று ரூ .25,000 / – பணமும் ஆக மொத்தம் ரூ .50,000 / பெற்றுக்கொண்டு , பொதுப்பணி தமிழ்நாடு அமைச்சுபணி திருச்சிராப்பள்ளி வருவாய் அலகு பதிவறை எழுத்தர் பணி என பணி ஆணை ஒன்றை வழங்கியுள்ளார். ஆணை பெற்று கொண்ட மாற்றுதிறனாளி ஸ்ரீகாந்த் பணியில் சேர வேண்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற கேட்டபோது தன்னை முதியவரான சங்கர கிருஷ்ணன் மோசடி செய்தது தெரியவந்ததன் காரணமாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அவர்களின் உத்தரவின்பேரில் உடனடியாக புகாரை பெற்ற கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி சங்கர கிருஷ்ணனான முதியவரை உடனடியாக கைது செய்து , நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் , திருச்சி மாநகரில் இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் , பொதுமக்களிடம் வேலை வாங்கி தருவதாக யாரேனும் தெரிவித்தால் ஏமாற வேண்டாம் என்றும் , அவர்களை பற்றிய தகவல்களை உடனடியாக திருச்சி மாநகர காவல்துறைக்கு தெரிவிக்கும்படி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்