திருவெறும்பூர் அருகே மின்சாரம் தாக்கியதில் இரண்டு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்ததோடு அதிர்ஷ்டவசமாக பல மாடுகள் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு கிராமத்து சேர்ந்தவர்களின் ஆடு, மாடுகள் பக்கத்திலுள்ள தாமரைகுளம் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று மதியம் மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் தாமரைக்குளம் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது அப்பொழுது தாமரை குளத்தில் உள்ள மின்சார டிரான்ஸ் பார்மர் அந்த பகுதியில் மின் சார பிரச்சினை காரணமாக மின்சார ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தி உள்ளனர்.. அப்படி மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மின்சாரம் ரிட்டர்ன் சப்ளையானது யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் பிரான்ஸ்பார்மர் அமைந்துள்ள மின்கம்பத்தை ஒட்டி உள்ள எர்த் கம்பி கட்டாகி மெயின்லைனில் உறசிகொண்டு இருந்தால் எர்த் லைனில் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இது தெரியாமல் மாடுகள் மின் கம்பத்தில் உள்ள எர்த் கம்பி உரசி உள்ளது, அதில் நவல்பட்டு அதிமுக நிர்வாகியும் நவல்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான பாலமூர்த்தி மற்றும் தனபால் ஆகியவர்களின் கறவை பசு மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.மேலும் பல மாடுகள் அதனை உரசி அடிபட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி சென்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் நவல்பட்டு கிராம மக்கள் சம்பவ இடத்தில் கூடுயதோடு இச்சம்பவம் குறித்து உடனடியாக நவல்பட்டு மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் நவல்பட்டு மின்சார AE கமருதீன், நவல்பட்டு RI கீதா, நவல்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சான்றோ ஆகியோர் சம்பவ இடத்திலிருந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த மின்சாரம் பாய்ந்தட்ரான்ஸ்ஃபார்மரை சரிசெய்ய பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு காட்டூர் கால்நடை மருத்துவர் பாலசுப்பிரமணியன் வந்து சம்பவ இடத்திலேயே இறந்து போன கால்நடைகளை புதைத்தனர். மேலும் அந்த மின்சார டிரான்ஸ்பார்மர் தொடர்ந்து இரவு நேரங்களில் மின்கம்பிகள் உரசி தீப்பொறி பறக்கும்சில நேரங்களில் தீ பற்றி எரியும் என்றும் மேலும் இதுவே மனிதர்கள் யாரேனும் அந்த மின் கம்பத்தை போய்க்கொண்டிருந்தால் சம்பவம் மிகவும் விபரீதமாக முடிந்து இருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *