திருச்சி அருகே குமாரமங்கலம் ரயில் நிலையம் அருகே முன்னறிவிப்பின்றி பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் தவிப்பு. ஒரு மணி நேரத்துக்கு மேல் கேட் திறக்கப்படவில்லை. அப்போது கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்று வலியால் மருத்துவமனைக்கு செல்ல கேட் திறக்க பொது மக்கள் அறிவுறுத்தியும் கேட் திறக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முன்னறிவிப்பின்றி ரயில்வே கேட் மூடப்பட்டது ஏன் என ரயில்வே ஊழியர்களிடம் கேட்டு வாக்குவாதம் செய்து மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்