திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அரசு இயன்முறை சிகிச்சை பயிற்சி கல்லூரியில் ரெப்டெசிமர் தடுப்பூசி மருந்து வழங்கப்படுகிறது. 6 மருந்து குப்பிகள் கொண்ட ரெம்டெசிவர் தடுப்பூசி மருந்தின் விலை ரூபாய் 9408 ஆகும்…

வாங்குவதற்கு தேவையான ஆவணங்கள்

1. நோயாளியை பரிசோதித்த மருத்துவரிடமிருந்து நோயாளியின் பெயர் , நோயின் தீவிரம் மற்றும் ரெப்டெசிமர் மருந்தின் தேவை குறித்த அறிக்கை

2. சமர்ப்பிக்கும் மருத்துவ அறிக்கையில் பரிசோதித்த மருத்துவரின் கையொப்பம் , முத்திரை , தொலைபேசி எண் மற்றும் மருத்துவப் பதிவு எண் ஆகியவை கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

3. நோயாளியின் CT SCAN ( அசல் ) அல்லது RTPCR அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும்

4. ஆதார் அடையாள அட்டை அசல் மற்றும் நகல் ( சமர்ப்பிப்பதற்கு ) கொண்டு வர வேண்டும்.

5. மருந்து வாங்க வரும் நோயாளியின் உதவியாளரும் ஆதார் அடையாள அட்டை நகல் சமர்ப்பிக்க வேண்டும் .

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்