திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 26.11.2021 வெள்ளிக்கிழமையன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது . இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன . இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு , பன்னிரெண்டாம் வகுப்பு , ஐ.டி.ஐ ( All Trades ) , டிப்ளமோ , மற்றும் பட்டப்படிப்பு ( B.E.Also ) முடித்த அனைவரும் ( வயது வரம்பு : 18 – க்கு மேல் 35 – க்குள் ) கலந்துகொள்ளலாம் . மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல் , சுயவிபரக்குறிப்பு ( Resume ) மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் வருகிற 26.11.2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்