திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் உள்ள இயந்திரத்தில் திடீர் கோளாறு காரணமாக வாக்குபதிவு நிறுத்தி வைப்பு.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 54 வது வார்டு வெஸ்ட்ரி பள்ளியில் அமைந்துள்ள 613 வது வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காலையிலிருந்து 62 பேர் வாக்களித்து இருந்த நிலையில் திடீரென இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது அதனை தொடர்ந்து அந்த வாக்குப்பதிவு மையத்தில் மட்டும் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் வேறு ஒரு வாக்கு பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. கஇந்நிலையில் இந்த மையத்தில் வாக்களிக்க வந்த திருச்சி சிவா எம்.பி நீண்ட நேரம் காத்திருந்தார் இவருடன் வாக்களிக்க வந்தவர்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்து நிற்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்