திருச்சி திருவெறும்பூர், மேலகல்கண்டார் கோட்டை அர்ஜுனன் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மகன் மணிவாசகம் வயது (21).இவர் அதே பகுதியில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு மேலகல்கண்டார் கோட்டை ஆலத்தூர் பாலத்தின் அருகே நடந்து சென்ற போது திடீரென அவரை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிவாசகத்தின் முகம் மற்றும் மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடம் வந்த பொன்மலை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த மணிவாசகத்தின் உறவினர்கள் சம்மந்தப்பட்ட கொலையாளிகள் யார் என உடனடியாக போலீசார் விசாரணை நடத்தி, கைது செய்யக் கோரினர். மேலும் படுகொலை செய்யப்பட்ட மணி வாசகத்தின் உடலை அங்கிருந்து எடுக்க விடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதி அளித்ததின் பேரில் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் படுகொலை செய்யப்பட்ட மணிவாசகனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆள் நடமாட்டம் மிக்க பிரதான சாலையில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்