திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே இனாம் கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் இவரின் தந்தை நல்லையன் இறந்து விட்டார். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் வாரிசு சான்றிதழ் வழங்க கோரி மண்ணச்சநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ரூபாய் 12 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என இனாம் கல்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் மற்றும் வருவாய் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் கேட்டனர். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத விவசாயி மாணிக்கம் இது குறித்து திருச்சி லஞ்சம் ஒழிப்பு அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் லஞ்சம் பணம் 12 ஆயிரம் ரூபாய் வாங்கிய இனாம் கல்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் வருவாய் ஆய்வாளர் முருகேசன் ஆகிய இருவரையும் மனச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன் இன்ஸ்பெக்டர் சக்திவேல் உள்ளிட்ட போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்