திருச்சி மாவட்டம் மருங்காபுரி மஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் இவரது சொந்த நிலத்தின் மீது உயர் மின்னழுத்த மின்சார ஒயர்கள் மரத்தை உரசிய படி சென்றதால் விவசாயி சுப்பிரமணியன் மரக்கிளைகளை வெட்டியுள்ளார்.

 இது குறித்து அறிந்து வந்த மருங்காபுரி தாசில்தார் லட்சுமி விவசாயி சுப்ரமணியனிடம் கிளைகளை வெட்டிய குற்றத்திற்காக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றால் 30 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

அதற்கு முன்பணமாக இன்று பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார் லஞ்சம் தர மனமில்லாத விவசாய சுப்பிரமணியன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார் தகவல் அடிப்படையில் இன்று தாசில்தார் லட்சுமியிடம் பத்தாயிரம் ரூபாயை இலஞ்சமாக கொடுத்த போது கையும் களவுமாக பிடிபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *