திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள எம். ஆர். பாளையம் கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் கந்தன் இவரது மகன் சண்முகசுந்தரம் வயது 65 இவர் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில செயலாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவி இவருடன் கோபித்துக் கொண்டு கடந்த 15 நாளுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் இவர் மட்டும் எம் ஆர் பாளையம் கிழக்கு காலனியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு இவரை கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இன்று காலை அவருடைய அக்கா வழக்கம்போல் விவசாயி சண்முகசுந்தரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு வந்து பார்த்தபோது வீட்டில் ரத்த காயங்களுடன் விவசாயி சண்முகசுந்தரம் ரத்த காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.‌ இதுகுறித்து சிறுகனூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *