திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரநகர் பகுதியில் உள்ள Dr. யோகேஸ்வரன் வயது 27 என்பவர் கடந்த 07.09. 2021அன்று இவரது நண்பரின் திருமணத்திற்காக வீட்டைப் பூட்டிவிட்டு திருநெல்வேலி சென்றவர் மீண்டும் இன்று காலை வீட்டிற்கு வந்தபொழுது safety gate ல் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், மேலும் வீட்டின் முன்புறம் உள்ள மெயின் டோர் கொண்டியை உடைத்து பின் வீட்டின் உட்புறம் நுழைந்த தரைதளத்தின் பெட்ரூமில் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த 8 சவரன் தங்க நகை, ரூபாய் 40000/- பணம் மற்றும் பூஜை ரூம் மேல் வைத்திருந்த மூன்று சூட்கேஸ் வெள்ளி பொருட்கள் மற்றும் முதல் மாடியில் பெட்ரூமில் பீரோவில் இருந்த 10 சவரன் நகைகளை திருடியது தெரியவந்தது உடனடியாக இதுகுறித்து காவல் நிலையத்து தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு கண்டோன்மெண்ட் சரக சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையர் மற்றும் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு ஆய்வாளர் மற்றும் அமர்வு நீதிமன்ற காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் 18 சவரன் தங்க நகை, 3 சூட்கேஸ் வெள்ளி பாத்திரம்.ரூபாய் 40000/- ரொக்கப் பணம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. திருட்டு குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *