திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரகம்பி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன்.இவருடைய மனைவி லதா.இவர்களுக்கு நிரோஷா என்ற மகளும்,சங்கீத்குமார் என்ற மகனும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி சென்னையில் வசிக்கிறார்.மகன் சங்கீத்குமாருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.இதில் அன்பழகன் சாரஜாவிலும்,மகன் துபாயிலும் வேலை செய்து வருகின்றனர்.சங்கீத்குமாரின் மனைவி தன் தாய்வீடான துறையூரில் உள்ளார். இவரது மனைவி லதா மட்டும் பெரகம்பியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில்

சென்னையில் வசிக்கும் தன மகள் வீட்டிற்கு தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு கடந்த 2 ந்தேதி லதா சென்றுள்ளார்.7 ந்தேதி காலை கிளம்பி லதா பெரகம்பிக்கு திரும்பியுள்ளார். வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். நீண்ட நேரமாக கதவு திறக்கப்பட்டிருப்பதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து லதாவிற்கு தகவல் தெரிவித்தனர். லதா வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த திருட்டு கும்பல் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 138 பவுன் மதிப்பிலான தங்க நகைகள், 8 கிலோ வெள்ளி பொருட்கள், 1.5 லட்சம் மதிப்பிலான வைரதோடு, ரொக்கப்பணம் 30ஆயிரம் ஆகியவற்றை திருடிக்கொண்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சிறுகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் ஸ்பார்க் தடயங்களை சேகரித்தனர்.மேலும் சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி சரக டிஐஜி சரவண கார்த்தி மற்றும் எஸ் மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து எஸ்பி மூர்த்தி தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ,பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *