திருச்சி மாநகரத்தில் நடைபெற உள்ள மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு விநியோகம் மற்றும் மனு தாக்கல் செய்யும் இடங்களான ஸ்ரீரங்கம் , அரியமங்கலம் , கோ – அபிஷேகபுரம் , பொன்மலை என நான்கு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் அரியமங்கலம் மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்தை ஆய்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகரத்தில் உள்ளாட்சி தேர்தலை பாதுகாப்பாகவும் , அமைதியாகவும் . சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணம் நடைபெற காவல் அதிகாரிகள் , உதவி ஆணையாளர்கள் , காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கும் தக்க அறிவுரை வழங்கினார் .

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்த்திகேயன்,

ஸ்ரீரங்கம், கோ-அபிஷேகம் அரியமங்கலம், ஸ்ரீரங்கம் கோட்டங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இந்த நான்கு கோட்டங்களிலும் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்ப பட்டுள்ளதாககூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *