ஹோண்டா மோட்டர் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் சார்பில் திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம் ரோட்டில் ஹோண்டா பிக் விங் புதிய ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது இதன் திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு புதிய ஷோரூமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில் honda பொது மேலாளர் சர்வஜித் சவுகான், டீலர் முன்னேற்ற குழு ஆர்மித் சிங் ராணா முன்னாள் கொரோனா மனோகரன் திருச்சி ஹோண்டா பிட்வின் நிர்வாக இயக்குனர் விக்னேஷ் டாக்டர் ராஜேஷ் விற்பனை பிரிவு ஜெரின் ரெஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய ஷோரூமில் புதிய வரவாக ஹோண்டாவின் பிரீமியம் மோட்டார் சைக்கிள் 300 சிசி முதல் 1800 சிசி வரை திறன் கொண்ட எச் நெஸ் சிபி 350 மற்றும் சிபி 350 ஆர் எஸ் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியுள்ளது