திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட அரசு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதில் திருச்சி மக்களின் நீண்டநாள் கனவாக இருந்த பஞ்சப்பூரில் ரூபாய் 852 கோடியில் அமைய உள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு முதற்கட்டமாக 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்க அடிக்கல் நாட்டும் பணி என மொத்தமாக 604 கோடி 10 லட்ச ரூபாய்க்கான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்..

அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளாக இருக்கக்கூடிய, சத்திரம் பேருந்து நிலையம், மலைக்கோட்டை இல் இரவு நேரத்தில் ஒளிரும் மின் விளக்குகள், கால்நடை மருத்துவ கட்டிடங்கள், மாணவர்களுக்கான தங்கும் விடுதி, ஆயுதப்படை வளாகத்தில் ரைஃபில் கிளப், தரம் உயர்த்தப்பட்ட தார் சாலைகள், நாக மங்கலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட 153 கோடியை 22 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். மேலும் 28 அரசு துறைகள் மூலம் 45 ஆயிரத்து 344 பயனாளிகளுக்கு 327 கோடியே 48 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்..,

 

இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், சிவசங்கர், அரசு கொறடா செழியன், எம்பி சிவா, எம் பி திருநாவுக்கரசர், தமிழ்நாடு அரசு டில்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன், எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், இனிகோ ஆரோக்கியராஜ், கதிரவன், துரை.சந்திரசேகரன் மற்றும் முத்துராஜா, நீலமேகம், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகர், புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் ராம்குமார், காஜாமலை விஜய், கண்ணன் மோகன்தாஸ் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.