திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் மனோகரன் வயது 37. இவர் திருச்சியில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசராக பணிபுரிந்து வருகிறார். அதன்படி திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள ஒரு பிரபல தொழில் நிறுவனத்திற்கும் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தை கடந்த 15 3 2023 அன்று தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் என்பவர் ஆய்வு மேற்கொண்டுவிட்டு பின் அந்த நிறுவனத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கவில்லை என்று அவர்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார். அதன் பேரில் ஆலோசகர் மனோகரன் அந்த நிறுவனத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது என்று கூறி ஆவணங்களின் நகல்களை தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.

அதற்கு தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் திருச்சியில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் எங்களுக்கு முறையாக கவனித்து விடுகிறார்கள் ஆனால் உங்கள் நிறுவனத்தில் இருந்து மட்டும் எங்களை கவனிக்காமல் இருக்குறீர்கள். நாங்கள் நினைத்தால் உங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் அபராதம் விதிக்கலாம் தெரியுமா என்று கூறிவிட்டு 15000 லஞ்சமாக கொடுங்கள் உங்களுக்கு பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோகரன் மேற்படி நிறுவனத்திடம் அனுமதி பெற்றுவிட்டு, தன்னிடம் லஞ்சம் கேட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் ஆலோசனையின் பேரில் இன்று மாலை சுமார் 4 மணியளவில் மனோகரனிடம் இருந்து தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் 15,000 ரூபாய் லஞ்சமாக வாங்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறை துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்