திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்டபட்ட பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் மற்றும் கூடுதல் மின் பளுவினை சரிசெய்யும் பொருட்டு , தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில் உறையூர் பகுதியில் கீரக்கொல்லை மாதுளங்கொல்லைத் தெரு , நாச்சியார்கோயில் , வெள்ளாளத்தெரு , சீனிவாசநகர் பகுதியில் சண்முகாநகர் 8 ஆவது கிராஸ் , கல்லாங்காடு , செல்வாநகர் , திலகர் தெரு 4 ஆவது மெயின் ரோடு , திலகர் தெரு 5 ஆவது மெயின் ரோடு , கண்டோன்மெண்ட் பகுதியில்

மார்சிங்பேட்டை , பீமநகர் , பொன்னகர் பகுதியில் அசோக் நகர் , அருணா அவென்யூ , சக்திநகர் , சேரன்சாலை , நட்சத்திராநகர் , ஜெயநகர் , ஜே.ஆர்.எஸ் நகர் ஆகிய ரூபாய் 73.15 இலட்சம் மதிப்பிலான 18 புதிய மின்மாற்றிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேஎன்.நேரு இன்று மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார் . இந்நிகழ்வில் , மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மின்சார வாரிய கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி , முன்னாள் துணை மேயர் அன்பழகன் , மாவட்டப் பிரமுகர் வைரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்