போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படியை உயா்த்த வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட 23 சங்கங்கள் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் பொது 95 சதவீதத்திற்கு மேல் பேருந்துகள் இயங்கியதாக போக்குவரத்து துறை அறிவித்தது  இதனிடையே இன்று இரண்டாவது நாளாக பேருந்துகள் இயங்காது எனவும் மேலும் மறியல் மற்றும் பணிமனை முற்றுகை போராட்டம் நடைபெறும் எனவும் தொழில் சங்கத்தினர் அறிவித்தனர்

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள தொழில் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார் அதே போல திருச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு தொழில் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேருந்து நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மத்திய பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *